வாரியபொல பகுதியில் கோர விபத்து - குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில்! tamil lk news

 வாரியபொல, களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி நேற்று மாலை பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

tamil lk news


இந்த விபத்தின் போது வானில் 12 பெண்கள் உட்பட 15 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலை இமியாங்கொடையில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


இவர்கள் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களில் 14 பேர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்