சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வங்கக்கடலில் - சுனாமி எச்சரிக்கையா?

 

Tamil lk News

 வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது. 



இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்போ பதிவாகவில்லை. தற்போது வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றத. 



22 ஆம் திகதி  டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் சிறிய அளவிலான அதிர்வு உணரப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்