இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு, ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (4) காலி முகத்திடலில் நடைபெற்றது.
நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் 'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார்.
தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை மற்றும் இசைக்கப்படாமை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறான விமர்சனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka