பாலஸ்தீன(Palestine) தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய(Australia) வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில் ஹமாசிற்கு இடமில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தற்போதைய வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இஸ்ரேலியர்களும் மற்றும் பாலஸ்தீனியர்களும் அருகருகில் வசிக்கும் இரண்டு நாடு தீர்வே ஒரே நம்பிக்கையென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல தசாப்தங்களாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் தவறியமையும் பாலஸ்தீன தேசம் குறித்த விடயத்தில் ஈடுபாட்டை காண்பிப்பதற்கு நெதன்யாகு அரசாங்கம் தவறியமையும் பரந்துபட்ட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக பெனிவொங் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக இரண்டு தேசத்தினை நோக்கிய செயற்பாடாக பாலஸ்தீன தேசம் குறித்து சர்வதேச சமூகம் தற்போது சிந்திக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனோடு பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பது எதிரிக்கு வெகுமதி அளிக்கும் செயல் என்பது தவறான கருத்து அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது இரண்டுதேச கொள்கைகயிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டுதேச கொள்கையை ஏற்றுக்கொள்வது ஹமாஸை பலவீனப்படுத்த உதவுமென பெனிவொங் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.