வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் சடலம் மீட்பு....! அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை! vavuniya news

 

vavuniya tamil news

வவுனியா(vavuniya) நெளுக்குளம் குளத்தினுள் இன்று (10.04) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளமையுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதினை அவதானித்துள்ளார் . இதனையடுத்து அவர் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதினால் இச் சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சடலமாக காணப்படும் நபர் மஞ்சல் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளமையுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்