வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறும் கனடா மக்கள்! tamil lk news

tamil lk news


 மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விடயம் எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.



இதன் காரணத்தினால் அந்நாட்டில்  வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் நுகர்வோர் கடன் சுட்டியில் சாதக நிலை பதிவாகியுள்ளது.


தற்பொழுது கடன் நிலைமைகள் குறைவடைந்துள்ளதாக கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும், நாட்டில் தொடர்ச்சியாக வட்டி வீதம் அதிகரித்துச் செல்லும் நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பணவீக்க நிலைமைகள் குறித்து கனேடியர்கள்  தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.


குறிப்பாக சமூகக் கடப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைக்காக செலவிடப்பட்ட தொகைகளை மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பிறந்த நாள் விழாக்கள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றில் பங்குபற்றுவதனையே மக்கள் குறைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்