பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தால் பதின்ம வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.....! Tamil lk News

 

tamil lk news

கொழும்பில்(clombo) வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரியவந்துள்ளது.


பேஸ்புக்கில்(facbook)  பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலை செய்ய குறித்த சிறுமி வந்துள்ளார்.


அதன்படி இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு சலூனில் வேலை உள்ளதாக கூறியதாகவும் கொழும்பிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.


பின்னர் குறித்த சிறுமியை சந்தித்த இந்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.


வேலை வாங்கித் தருவதாக சிறுமியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் காதலி என கூறப்படும் 23 வயதுடைய யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டடத்தின் உரிமையாளர் ஆகியோர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்