22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் (04.04.2024) 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 24,390 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 195,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,360 ரூபாவாகவும் , 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 178,900 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,350 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.