வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெருமளவு கஞ்சா மீட்பு....! vavuniya news

 

vavuniya news-tamil lk news

வவுனியா(vavuniya) விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிசார் சோதனை

 குறித்த நபர்கள் கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை வழிமறித்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.


இதன்போது குறித்த காரினுள் ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.


வவுனியா நெடுங்கேணி,ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்