(srilanka tamil news) இலங்கையில் நாணயத்தாள் (Sri Lankan Rupee) பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் நாணயத்தாள்களை கையாள்வதில் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், ஏனைய பல பகுதிகளிலும் போலி நாணயத்தாள்களை பணத்தை மாற்றுவதற்கு நபர்கள் வரலாம்.
மேலும் பண பரிவர்த்தனை செய்யும் போது ஏதேனும் பணத்தாளில் மாற்றம் இருந்தால் உடன் தகவல் தெரிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
srilanka