நிலவை நோக்கிய அடுத்த பயணம்: இஸ்ரோவின் சந்திரயான் - 4 திட்டம்...!

 இந்திய(India) விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) நிலவில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டமாக சந்திரயான் - 4 (Chandrayaan-4) ஐ நிலவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் (S. Somnath) தெரிவித்துள்ளார்.

tamil lk news


கடந்த 2023 ஆம்ஆண்டு இஸ்ரோவின் முயற்சியால் சந்திரயான் - 3 (Chandrayaan-3) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சாதனை படைத்தது.


இதனை தொடர்ந்து இஸ்ரோ சந்திரயான் - 4ஐ அனுப்புவதற்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 4 (Chandrayaan-4) தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா(India) அழைக்கப்படும்.


இதன்போது சந்திரயான் - 4இன் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும்.

அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியே வரும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேமித்து, பூமிக்கு அனுப்பும்” என தெரிவித்துள்ளார்.


மேலும் பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அறிவுறுத்தலுக்கமைய, சந்திரயான் - 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலவின்(Moon) தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

tamil lk news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்