லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது: சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு...!

 


லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்  தெரிவித்துள்ளார்.




 புதிய விலைகள்

12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135 ரூபா குறைக்கப்படும் நிலையில் புதிய விலை 4115 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

srilanka tamil news



இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.



மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்