வீதியை விட்டு விலகிய கார் விபத்து - இன்று அதிகாலை சம்பவம்

 ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, ஹட்டன்  குயில்வத்தை  பகுதியில்  இன்று  புதன்கிழமை (19) அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

tamil lk news


காரின் சாரதி உறங்கியமையினால் கார்  வீதியை  விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தில் காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், 





கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Srilanka Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்