இந்தியாவின் பீகார் மாநிலம், கயா மாவட்டத்திலுள்ள கிஜ்ராசராய் பகுதியில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
கிஜ்ராசராய் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி மீண்டும் தகராறு முற்றியது.
மனைவியை கடுமையா
இதன்போது, கணவன் மனைவியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தள்ளி வீழ்த்தி, அவரது உடல் மீது அமர்ந்து, அவரது நாக்கை கடித்து துண்டித்து மென்று விழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாக்கு துண்டிக்கப்பட்டதால் கடுமையான வலியில் கணவன் அலறி துடித்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், மனைவி கணவன் மீது அமர்ந்திருப்பதையும், கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆபத்தான நிலையில்
உடனடியாக கணவனை மீட்டு, அருகிலுள்ள அரசு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.கணவனுக்கு அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்தது.
பிரித்தானியாவில் கறுப்பு ஜூலைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கயாவிலுள்ள மகத் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக கிஜ்ராசராய் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.