திருகோணமலையில் டிப்பர் மோதி 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழப்பு...!

 திருகோணமலை(Trincomalee) - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர், மயிலிமலை கல்லுடைக்கும் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து சம்பவம் நேற்று(14.06.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில், சேனையூர், 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய வி.விதுர்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.




குறித்த பகுதியில் கருங்கற்களை ஏற்றிச் செல்கின்ற டிப்பர் வாகனமே மோதியுள்ளது என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

அத்துடன், சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான  மேலதிக விசாரணையை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Trincomalee Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்