வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்! Vavuniya News

tamil lk news
 

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.



கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


முக்கிய தீர்மானங்கள்

இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கடசியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



Vavuniya Tamil News


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்