மன்னார் முருங்கன் பிரதான வீதியில் கோர விபத்து- இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!

tamil lk news

.

 மன்னார் (Mannar)- முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில்  பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர்  சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.  


குறித்த விபத்து   இன்று மாலை 5. மணி அளவில்  இடம் பெற்றுள்ளது.


மன்னாரில் இருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா (Vavuniya) பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கும் இடையில் உள்ள  ரயில்வே கடவைப் பகுதியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்



மரணமடைந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன் இளம் குடும்பஸ்தர் என    தெரிய வருகிறது.



மேலும்  சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்