வவுனியாவில் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஒருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.


வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றில், 


தந்தை சிறுகுற்றச் செயலில் சிக்கி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில், 

tamil lk news


தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பராமரித்து வருகிறார்.


இந்நிலையில், தாயார் கூலி வேலைக்கு செல்லும்போது தனது பிள்ளைகளை அயல்வீட்டில் விட்டுச் செல்வது வழமையாக இருந்துள்ளது.


இவ்வாறு அயல்வீட்டில் விட்டுச் சென்ற நிலையிலேயே, 3 வயது சிறுமி பாலியல் தொல்லையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலையத்தில் தாயார் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 



அத்தோடு, சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 




கைதான நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Vavuniya Tamil News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்