திருகோணமலையில் (Trincomalee) உள்ள கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மனையாவளி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய எஸ். கோகுலராஜ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் குடும்பத்தாருடன் தம்பலகாமம், கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருகின்றது.
உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trincomalee Tamil News