மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்த்தாடவுள்ளது.
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது இது 9ஆவது முறையாகும்,
மேலும் இந்திய வீராங்கனைகள் 7 முறை ஆசிய செம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இலங்கை மகளிர் அணி 6 தடவைகள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய அணி சார்பில், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் , உமா செத்ரி, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா , ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை அணி சார்பில், சாமரி அதபத்து , அனுஷ்கா சஞ்சீவனி, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அமா காஞ்சனா, உதேஷிகா பிரபோதனி, விஷ்மி குணரத்னே, காவ்யா கவிந்தி, இனோஷி பிரியதர்ஷனி, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரியா, கவீஷானி குலசூரியா, நிஷானி குலசூரியா, நிஷானி குலசூரிய கிம்ஹானி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.