தேசிய விளையாட்டு விழாவில் புதிய சாதனையை நிலைநாட்டிய யாழ். மைந்தன்...!

tamil lk news


 அகில இலங்கை ரீதியில் நடைபெறும் 48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாண வீரர்  சேர்ந்த அருந்தவராசா புவிதரன் புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.


யாழ். சாவகச்சேரியினை சேர்ந்த புவிதரன் குறித்த போட்டியில் 5.11மீற்றர் உயரத்தினை கடந்து தனது புதிய சாதனையை படைத்துள்ளார்.


48 வது தேசிய விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.



இதில் நாட்டிலுள்ள 9 மாகாண வீர,வீராங்கனைகள் பங்குபற்றினர்.

இப்போட்டிகளில் கோலூன்றிப்பாய்தல் ஆண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய தேசிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.



அத்தோடு கோலூன்றிப்பாய்தல் பெண்கள் பிரிவில் சாவகச்சேரியினைச் சேர்ந்த நேசராசா டக்ஸிதா 3.51M உயரத்தினைக் கடந்து புதிய தேசிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்