இலங்கையில் - டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

 இலங்கையில் (Srilanka) இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 32,078 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


அத்துடன், அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

tamil lk news


இந்நிலையில் கொழும்பு மாவட்டத்தில் 7,551 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்