12 வயதான சிறுமி விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணம்

 

tamil lk news

குருநாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்று தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


மனஷா ஹன்சனி என்ற 12 வயதான சிறுமி தனது 16 வயதுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.


மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்கு அருகில் உள்ள பாறை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் காயமடைந்த சகோதரனும் சகோதரியும் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சகோதரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் காயமடைந்த மாணவியின் சகோதரன் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்