அம்பாறையில் பார ஊர்தி- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

 

tamil lk news

கல்முனை நோக்கி பயணித்த நபர், கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.


இவ்விபத்து இன்று(14) காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்தில் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த நபரே உயிரிழந்தவர் ஆவார்.


இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.



குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka Tamil News





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்