பாகிஸ்தானில் mpox வைரஸ் பாதிப்பானது தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பானது அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் மூன்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டத்தினை தொடர்ந்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸின் புதிய மாறுபாட்டின் ஆபத்துக்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய் நிலைமை கண்டறியப்பட்டவர்களை தனிமை படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் mpox வைரஸின் புதிய மாறுபாட்டின் காரணமாக உலகளாவிய அவசரநிலையை அறிவித்தது.
கடந்த ஆண்டு பரவிய mpox விட இந்த புதிய வகை வைரஸ் கொடியதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் mpoxஆல் பாதிக்கப்பட்டதாக தரவுகள் பதிவாகியுள்ளன.
அவர்களில் 524 பேர் இறந்துள்ளனர். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வைரஸ் நோய் இதுவரை ஆப்பிரிக்காவில் 13 நாடுகளில் பரவியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



