விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த 6 சீன(china) பிரஜைகள் பயாகல பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன பிரஜைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்கிய குழு நேற்று (31) கைது செய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 24, 27, 39 வயதுடையவர்கள் எனவும் பெண் 48 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் பயாகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News