திருகோணமலை (Trincomalee) நகரில் உள்ள கடற்கரையில் இன்று அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை நகர செயலாளர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Trincomalee Tamil News