இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் அதிரடி கைது!

 

tamil lk news

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த இருவரும் இன்றையதினம்மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக சிங்களவர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணம் அவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


முன்னதாக, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மற்றைய தம்பி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்