இந்திய அணியுடனான டி20 தொடரை இழந்ததன் பின்னர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களின் திறன் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு சென்றது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியானது சமநிலையில் முடிந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக வணிந்து ஹசரங்கவின் வெளியேற்றம் காணப்படுகிறது.
போட்டியானது இலங்கை நேரப்படி மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அணி 47.3 ஓவர் நிறைவில் 230 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதன் காரணமாக போட்டி சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



