கடந்த எல்பிஎல் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



