ஊடுவிய உக்ரைன் படையினர் : ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு !

 

tamil lk news

உக்ரைனிய(ukraine) படையினர் கருங்கடலின் வடக்கு பகுதியில் மேற்கொண்ட ஊடுவல் தாக்குதலில் ரஷ்ய(russia) படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் அவர்களது இராணுவ உபகரணங்களும் அழிக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு  அமைப்பு தெரிவித்துள்ளது.


நேற்று(07) இரவு இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது ரஷ்ய படையினரின் கவசவாகனங்கள், இலத்திரனியல் போர் உபகரணங்கள் அழிக்கப்பட்டதுடன், ரஷ்ய படைக்கும் பெரும் சேதம் விளைவிக்ககப்பட்டது.


இதேவேளை உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுவதுடன், இவர்கள் 10 கிலோமீற்றர் வரை ஊடுருவி வந்ததாக ரஷ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


11 டாங்கிகள் 20க்கும் மேற்பட்ட கவசவாகனங்களின் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைனியபடையினர் முன்னெடுத்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கேர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லை கிராமங்களிலும், முன்னரங்குகளில் இருந்து பத்து கிலோமீற்றர் உள்ளேயும் பல மணிநேரம் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.





Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்