ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

tamil lk news


 ஜப்பானின் தொலைதூர இசு தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இந் நிலநடுக்கமானது 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.


இதனையடுத்து,  இசு தீவுகள் மற்றும் ஒகசவாரா தீவுகளை சுனாமி தாக்கக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இதனால் அத் தீவில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்