மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்களுக்கு ஏற்பட்ட துயரம்..!

 பொல்கொல்லை நீர்த்தேக்கத்துக்கு கீழ் மகாவலி ஆற்றில் நீராடச் சென்றவேளையில் காணாமற்போன இரு இளைஞர்களது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. 


கடந்த 25ஆம் திகதி மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற ஐந்து இளைஞர்களில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயிருந்தனர். 

tamil lk news


அதனையடுத்து, அந்த இருவரை தேடும் பணியில் வத்துகாமம் பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். 


இந்நிலையில், காணாமற்போன இருவரில் ஒருவரது சடலம் நேற்று (26) மாலை மீட்கப்பட்டுள்ளது.  


அதன் பின்னர், இன்று காலை மற்றைய இளைஞரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. 




உயிரிழந்த இரு இளைஞர்களும் 19 மற்றும் 20 வயதுடைய வத்துகாமம் குன்னேபான பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆவர். 


உயிரிழந்தவர்களது உடல்கள் இன்று கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்