வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!

  

tamil lk news

வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.


வவுனியா மாவட்டத்தில் மழை காலங்களில் மழை நீரானது டெங்கு நுளம்பு பெருக்கும் வகையில் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.




 எனினும், 2024ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 113 பேர் வவுனியாவில் டெங்கு நோயினால் பாதிப்படைந்தனர்.


 அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 82 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.




அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vavuniya News





புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்