பிரித்தானியாவின் இந்தோ பசுபிக் பிராந்தியத்துக்கான வெளியுறவுச் செயலர் கத்தரின் வெஸ்ட் (Catherine West) இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ள அவர், சிவில் அமைப்புக்களின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
அதனையடுத்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, வட மாகாண ஆளுநர் வேதநாயகன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். வர்த்தக சங்கத்தினர் மற்றும் சிவில் தரப்பினர் உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள அவர், யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள தரைக்கீழ் நீர் மற்றும் காலநிலை மாற்றம் சம்பந்தமான நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினை: போராட்டத்துக்கு தயாராகும் தாய்மொழி ஆசிரியர் சங்கம்
மேலும் வாசிக்கபிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கத்தரின் வெஸ்ட் இலங்கை யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்களுக்கான நியாயமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளதோடு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வெளிவிவகார அலுவலகத்தில் இந்தோ-பசுபிக் பிராந்திய செயலராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.