வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்துக்குள் புகுந்த வெள்ளம்

  வவுனியாவில் இன்று பெய்த கடும் மழையின் காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்துக்குள் வெள்ளநீர் சென்றமையினால் அலுவலக செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

tamil lk news


இன்று மதியம் வவுனியா மாவட்டத்தில் கடும் மழை பெய்ததன் காரணமாக மன்னார் வீதி மற்றும் ஒரு சில பிரதேசங்களிலும் வீதியை ஊடறுத்து நீர் பாய்ந்ததன் காரணமாக வெள்ளமாக காட்சியளித்தது.



இந்நிலையில் மன்னார் வீதியில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தினுள்ளும் வெள்ள நீர் புகுந்தமையினால் அலுவலகச் செயற்பாடுகள் பாதிப்படைந்ததோடு கடவுச்சீட்டுக்காக வருகை தந்திருந்தவர்களும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.



குறித்த கடவுச்சீட்டு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வடிகான் வெள்ளநீர் செல்வதற்கு போதுமானதாக காணப்படாமையினாலே இவ்வாறான அனர்த்தம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்