பெப்ரவரி மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டாலும், வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (21) நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு பதிலாக வேறுபட்ட முறைமையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
அத்தோடு, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு வலுவான டொலர் கையிருப்புக்கள் உருவாக்கும் சூழலில் எடுக்கப்படவில்லை என்றும் மாறாக பொருளாதாரத்தை மேலும் முன்னோக்கி நகர்த்தி வாகன சந்தையைத் திறக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று முதல் குறையும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
அதன்படி, ஒதுக்கக்கூடிய டொலர்களின் அளவு மத்திய வங்கியுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டதாகவும், வாகன இறக்குமதி செலவான 1.2 பில்லியன் டொலர்களை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார மேலும் தெரிவித்துள்ளார்.