வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்திய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்

tamil News

  மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை

பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த எண்ணிற்கு பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கும் முறைப்பாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்கனவே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

tamil lk news


அதன்படி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையர் நாயகத்திடம் அல்லது அந்த திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகளை 071 40 33 300 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.




இதேவேளை, TELL DMT என்ற முகநூல் பக்கம் மூலமும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைவதற்கான மற்றொரு வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்