பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி சூடு!

  கொழும்பில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது நேற்றிரவு (23) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு குறித்த காரை துரத்திச் சென்று துப்பாக்கி சூட்டினை முன்னெடுத்தனர்.

tamil lk news


மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தில் ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


News Thumbnail
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை; சிக்கிய மைத்துனர்!


குறித்த காரை கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் சோதனைக்காக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், அந்த உத்தரவை மீறி கார் வேகமாக பயணித்தமையினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்