வுனியாவவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் மடக்கி பிடிப்பு - இருவர் கைது! (Vavuniya News)

  

tamil lk news

வவுனியா (Vavuniya)- நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4ம் கட்டை பகுதியில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

திடீர் சோதனை நடவடிக்கை

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன்போது பட்டா ரக வாகனத்தை சோதனைக்குட்படுத்தியபோது கொள்கலன்களில் 128 கிலோ மாட்டிறைச்சியை முறையற்ற முறையில் கொண்டு சென்றமைக்காக வாகனத்தை  கையப்படுத்தியதுடன்  சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்தனர்.


News Thumbnail
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை; சிக்கிய மைத்துனர்!


மேலதிக விசாரணைகளின் பின்னர், கையப்படுத்தப்பட்ட 128 கிலோ மாட்டிறைச்சி, பட்டா ரக வாகனம் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆயர்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்