கல்கிஸ்சை – வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (07) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும்,
காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில்,
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.