வாழைச்சேனையில் அரச பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல்

  

tamil lk news

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணத்தில்  இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழைச்சேனையில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

tamil lk news


தாக்குதலுக்குள்ளான பேருந்துகள் வழமைபோல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு 07.30 மணியளில் இனம் தெரியாதோரினால் பேருந்துகள் மீது தீடிரென கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Small News Section
News Image 1

கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு!

மேலும் வாசிக்க


இதையடுத்து, பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த நிலையில், பிரயாணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து, பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளர்.


இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்