Srilanka News Tamil
65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.