மரண வீட்டில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

Srilanka News Tamil

மரண வீட்டில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி -Violent clash at funeral home - four admitted to hospital


 மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கடும் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், பெண் உட்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், 


மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.



சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்