காதலர்களுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை!

 Srilanka News Tamil

 காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால், அவை தொடர்பில் விரைவில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு  இலங்கை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


அதன்படி, 119 அல்லது 1997 என்ற எண்ணை அழைத்து இந்தத் தகவலை வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலர்களுக்கு பொலிஸார் விடுத்த அவசர எச்சரிக்கை! Police issue urgent warning to lovers!


எனவே, உங்கள் அன்புக்குரியவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சமூக பொறுப்புடன் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு  தெரிவித்துள்ளனர்.



"உங்கள் காதலர் ஏதேனும் தவறு செய்திருப்பதை நீங்கள் அறிந்தால், தயவுசெய்து அந்த தகவலை விரைவில் பொலிஸாருக்கு புகாரளிக்கவும்" என்று கூறப்பட்டுள்ளது. நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக சட்ட அமுலாக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.



கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியின் காதலன் கைது செய்யப்பட்டமை உட்பட அண்மையில் இடம்பெற்ற குற்றவியல் வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர்

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்