Srilanka News Tamil
இன்று காலை நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை ( Kankesanthurai)கப்பல் புறப்பட்டது. இவ்வாறு புறப்பட்ட கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.
இந்தியா - இலங்கை (India - Sri Lanka) இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது.
இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில்இ இந்தியாஇ இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று தொடங்கியுள்ள நிலையில் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.