Srilanka News Tamil
நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனைத்து சட்டத்தரணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்ட பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இனி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒத்துழைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடமும் கோரப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆயுதம் ஏந்திய அதிகாரிகளை நிறுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.