Srilanka News Tamil
கொழும்பு (Colombo) புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்வுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக குழு உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூடு நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கொழும்பு தேசிய வைத்தியசாலை - துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் பரபரப்பு
துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நீதிமன்ற வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சஞ்சீவை ஆறு தோட்டாக்கள் தாக்கிதாகவும், இதன் பின்னர் அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.