நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்த அரசாங்கம் - Srilanka Tamil News

tamil News

  Srilanka Tamil News

tamil lk news

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.


கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த ( K. D. Lalkantha) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


 அதற்கமைய, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.



 மேலும், விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்முதல் செய்யும் என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.



விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் அதே வேளையில், சந்தையில் அரிசியின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்