படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய இலங்கை நடிகை ஜனனி

 

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய இலங்கை  நடிகை ஜனனி - Sri Lankan actress Janani involved in accident during filming

 நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. 


இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.


தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். 


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். 


இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.


தற்போது நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


இந்த நிலையில் தான், ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார். 



அதில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து காலில் கட்டு போட்டுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்